வெள்ளி, 24 நவம்பர், 2023

முதிர்கன்னி


நிலவின் மௌனத்தில் நின்று இருளின் நிழல்
போர்த்தியவனே ...

இமைகள் தழுவும்
இருளின் வேளையில்
இதயம் தேடிய கள்வனே
வா ...

இரவின் நீல அகலங்களில்
நெட்டி முறி

இருளின் நீளம்
எதுவென்று கண்டுபிடி

மின்விசிறி சுழலிலும்
வேர்க்கும் வரம் கொடு ...

விரல் ஊன்றி
உடல்நட

மெல்லத் தழுவு
மூச்சின் வெப்பம் அறி

தொடர்ந்து வா

இதழ்களால் தேகம் வரை
எங்கும் தீண்டு

எச்சரிக்கையாய்
பல் கடி

நாக்கின் நுனியால்
மூக்கினைத் தொடு

காதோர வளைவை
நாவால் வருடு

எவ்வளவோ ......
அவ்வளவை மீறு ...

இடம் வலம் தேடு
நழுவிய ஆடை நகர்த்து
வெயில் படாத இடங்களில்
விரல் தீண்டு

இன்னும் ....
இன்னுமாய் ...
தொடரும் மீறலில் ....

ஏண்டி... சனியனே ...
இன்னுமா தூங்குற

அம்மாவின் குரல்

அன்னிச்சையாய்
கலைந்த கனவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முதிர்கன்னி

நிலவின் மௌனத்தில் நின்று இருளின் நிழல் போர்த்தியவனே ... இமைகள் தழுவும் இருளின் வேளையில் இதயம் தேடிய கள்வனே வா ... இரவின் ...