செவ்வாய், 19 அக்டோபர், 2021

யாரிடமும் சொல்லாதே

யாரிடமும் சொல்லாதே
ரகசியமெலாம் ஒன்றில்லை
நான் மரணித்துவிட்டேன்…

உண்மையாகவா…!

நிஜமாகவே…!

எனக்குத் தெரியாமல் எப்படி?

எனக்கே தெரியவில்லை?

என்னால் நம்பமுடியவில்லை…
என்ன காரணம்?
யாரேனும் விசம் வைத்தார்களா?
ஏதாவது மனக்கசப்பா?
ஏற்றுக்கொள்ளமுடியாத அன்பா?
துக்கமா?
துயரமா?
தோல்வியா?
விபத்தா?
தற்கொலையா?
கொலையா?
இல்லை யாராவது உன்னை
செத்துத் தொலை என்றனரா?
எதற்கும் பயனற்றவன் என்று?
உன்னால் என்ன பிரயோஜனம் என்று?
நிராகரித்தார்களா?
யாரையாவது ஏமாற்றினாயா?
இல்லை
ஏமாற்றப்பட்டாயா?
கண நேரத்தில் எடுத்த முடிவா?
சொல்….

மரணத்திற்கு
இவ்வளவு காரணங்களா!..
ஏதோ உயிர் போதலென்று
நினைத்திருந்தேன்..

இன்னும் சிறுபிள்ளையாகவே
இருக்கின்றாயே..
காரணத்தைச் சொல்…

தெரியவில்லை
இரவில் வீட்டில்
தூங்கிக் கொண்டிருந்தேன்
எழுந்து பார்த்தபோது
உன் வீட்டிலிருக்கிறேன்.
எனக்கே குழப்பமாக இருக்கிறது.
ஆனாலும் நான்
மரணித்துவிட்டேன்…

அடேய் சித்திரகுப்தா..

அரசே…

தெரியாமல்
நம் உலகத்திற்கு வந்தவனை
ஆதரிப்பதா? நிராகரிப்பதா?
ஆயினும் 
அவன் மரணித்துவிட்டான்.

என்ன செய்ய?

யாரிடமும் சொல்லாதே…

உத்தரவு அரசே!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முதிர்கன்னி

நிலவின் மௌனத்தில் நின்று இருளின் நிழல் போர்த்தியவனே ... இமைகள் தழுவும் இருளின் வேளையில் இதயம் தேடிய கள்வனே வா ... இரவின் ...