வெள்ளி, 24 நவம்பர், 2023

காதலித்துப்பார்....

காதலித்துப்பார்
நிலவு சுடும் ...
சுடாத சூரியன் வரும்.. நெருப்புக்குள்ளும் குடியிருக்க நினைப்பு வரும்..
தண்ணீரெல்லாம் வெந்நீராய் தகிக்கும்
தனிமை சுகமாகும்
நீ என்பது
நாம் ஆகும்
நிழல் கூட சற்று
தள்ளி விழும்
எதிர்ப்படுபவர் எவராயினும்
வறண்ட உதடுகள்
புன்னகை பூக்கும்
காற்றோடு பேசத் தோன்றும் கவிதையும் பேனாவும்
கைக்குள் வசப்படும்
நீ யாரென்று
எவராவது கேட்டால்
நீளமான புன்னகை
நிச்சயமாய் வரும் ...
வகுப்பறை சத்தங்கள் கூட
சங்கீதம் ஆகும்
காத்திருக்கும் வேளையில் கூட
ஐ மிஸ் யூ என்று
ஸ்டேட்டஸ் போட சொல்லும் சாலையோர பூக்களின்
வாசனை பிடிக்கும்
ஐந்து கிராம் இதயம் கூட
50 கிலோவை தாங்கும் ....
ஆணாகவோ....
பெண்ணாகவோ.... வேண்டாம்
மனிதன் ஆக வேண்டுமா காதலித்துப்பார்
மரணம் வரும் வேளை கூட
சற்று தள்ளிப் போகும்
காதலித்துப்பார்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முதிர்கன்னி

நிலவின் மௌனத்தில் நின்று இருளின் நிழல் போர்த்தியவனே ... இமைகள் தழுவும் இருளின் வேளையில் இதயம் தேடிய கள்வனே வா ... இரவின் ...