சாப்பிட அடம்பிடிக்கும்
குழந்தைகள் நிலவை ரசிப்பதில்லை
தொலைக்காட்சி சோட்டா பீம்மையும்
மைட்டி ராஜீவையும் தவிர
அக்கா தன் தோழிகளோடு
அம்மா அலுவலகத்தில்
அப்பா அவர் வேலையில்
வேலைக்காரி துணிமணி பாத்திரங்களோடு
நான் தனிமையில்....
அம்மா
தம்பி பாப்பா
எப்ப பிறப்பான்….
அலுவலக வேலையின்
அத்தனை மன உளைச்சலும்
கரைகின்றன அவன்
பொக்கை வாய் சிரிப்பில்....
ஒளிந்து கொள்கிறேன்
கண்டுபிடியுங்கள் என்று
தாயின் மடியில் ஒளியும் குழந்தையை
என்னவென்று சொல்ல....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக